மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி: ஆய்வு செய்தார் இறையன்பு
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை, தலைமை செயலர் இறையன்பு, சிறப்பு குழுவினருடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.



பல்லவர் கால சிற்பங்கள் அமைந்துள்ள, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலா தலம். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடக்க உள்ளதால், சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.வரும், 28ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 10 வரை, மாமல்லபுரம், 'போர் பாயிண்ட்ஸ்' விடுதியில், இப்போட்டி நடக்கிறது.

188 நாடுகளைச் சேர்ந்த, 343 அணிகளின் வீரர்கள், 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள், இதில் பங்கேற்கின்றனர்.போட்டி நடத்த, மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், இந்திய செஸ் கூட்டமைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வீரர்கள் பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.தமிழக அரசு, போட்டிக்கான ஏற்பாடுகளுக்காக 92 கோடி ரூபாய் அளித்து, 18 சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது.

சிறப்பு குழுக்களின் அலுவலர்கள், தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.போட்டி நடத்தப்பட உள்ள, 'போர் பாயிண்ட்ஸ்' விடுதியில், 70 ஆயிரம் சதுரடி பரப்பில் பிரமாண்ட அரங்கம் உள்ளது. அரங்கின் வடது புறத்தில், 52 ஆயிரம் சதுரடியில், ஜெர்மானிய வகை அரங்கம், அருகில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

பஸ்சில் சென்ற குழு
பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை செயலர் இறையன்பு மற்றும் சிறப்பு குழுவினர், நேற்று சென்னையில் இருந்து, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும், 'நம்ம சென்னை; நம்ம செஸ்' வாசகம் இடம் பெற்ற, அரசு விரைவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக பஸ்களில் மாமல்லபுரம் சென்றார்.

செஸ் கூட்டமைப்பு அலுவலகம், 'போர் பாயிண்ட்ஸ்' விடுதியில் செஸ் விளையாட்டு அரங்கம், கூடுதலாக அமைக்கப்படும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். கூடுதல் அரங்கை, மழை பாதிக்காத வகையிலும், தீத்தடுப்பு பாதுகாப்பு வகையிலும் அமைக்க அறிவுறுத்தினார். வாகன நிறுத்துமிடத்தை ஆய்வு செய்து, பாதைகள், பிற ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X