உடுமலை விஜய் நகரில் மரக்கன்றுகள் நடவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
உடுமலை விஜய் நகரில் மரக்கன்றுகள் நடவு
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

உடுமலை: உடுமலையில் விஜய்நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.சுற்றுச்சூழலை காக்கும் வகையில், மரங்களை வளர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், மழை- உடுமலை அமைப்பின் 13வது வார நிகழ்ச்சியாக உடுமலை ஏரிப்பாளையம் விஜய்நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நகராட்சி முதல்வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.விஜய்நகர் விநாயகர் கோவில் வளாகம், சேகர்புரம், குமார்நகர் உள்ளிட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், கிழக்கு லயன்ஸ் கிளப், அபெக்ஸ் சங்கம், ராயல் லயன்ஸ் கிளப், மனிதநேய காவலர்கள் கூட்டமைப்பு போன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X