திருப்பூர்: ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரியை திருப்பி அளிக்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவது, திருப்பூர் சாய ஆலை, ஜவுளி உற்பத்தி துறையினருக்கு பலனளிக்கும்.
மூலப்பொருளை அதிக வரி செலுத்தி கொள்முதல் செய்து, நிறைவுற்ற பொருளை குறைந்த வரி விகிதத்தில் விற்பனை செய்யும் நிறுவனங்களால், உள்ளீட்டு வரியை முழுமையாக கழித்துக்கொள்ள முடிவதில்லை. இதனால், நிறுவனங்களின் தொகை அரசிடம் தேங்கிவிடுகிறது. இத்தகைய நிறுவனங்களுக்கு, தேக்கமடையும் வரியை, அரசு திருப்பி அளித்துவருகிறது.
வரியை திருப்பி அளிப்பதில், மூலப்பொருளுக்காக செலுத்திய வரி மட்டுமே கணக்கிடப்படுகிறது; சேவைகளுக்காக செலுத்தும் வரி சேர்க்கப்படுவதில்லை.இந்த விதிமுறையால், திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், கழிவுநீர் சுத்திகரிப்புக்காக பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு செலுத்தும் வரியை திரும்ப பெறமுடியாமல் தவிக்கின்றன.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் இதுகுறித்து தொடர் கோரிக்கை அளித்துவந்தது. இந்த கோரிக்கை, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:மூலப் பொருட்கள் மட்டுமின்றி சேவைக்காக செலுத்தும் வரியையும் திரும்ப பெறும்வகையில், வரியை திருப்பி அளிக்கும் (இன்வெர்டர்டு டூட்டி) 'பார்முலா'வில் திருத்தம் கொண்டுவருவதாக ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, திருப்பூர் சாய ஆலைகளுக்கும், பல்லடம், சோமனுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.சாய ஆலைகள், மூலப்பொருளான சாயம் கொள்முதலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரி செலுத்துகின்றன; சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, 12 சதவீதம் வரி செலுத்துகின்றன. ஆனால், சாய கட்டணத்துக்கான ஜி.எஸ்.டி., வெறும் 5 சதவீதமாக உள்ளது.
'பார்முலா' மாற்றம் அமலாகும்போது, சாய ஆலைகளுக்கு, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு செலுத்தும் வரியும் திரும்ப கிடைக்கும். அதேபோல், சைசிங், வார்ப்பிங், வீவிங் சேவைகளுக்கு வழங்கும் வரி, ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைக்கும். கூடுதல் ரீபண்ட் தொகை கிடைப்பதன் மூலம், இந்நிறுவனங்கள் சந்தித்துவரும் நிதிச்சுமைகள் விலகும்.இவ்வாறு, அவர் கூறினார்.சாய ஆலைகள், மூலப்பொருளான சாயம் கொள்முதலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரி செலுத்துகின்றன; சாயக்கழிவுநீர்
சுத்திகரிப்புக்கு, 12 சதவீதம் வரி செலுத்துகின்றன. ஆனால், சாய கட்டணத்துக்கானஜி.எஸ்.டி., வெறும் 5 சதவீதமாக உள்ளது. பார்முலா' மாற்றம் அமலாகும்போது, சாய ஆலைகளுக்கு, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு செலுத்தும் வரியும் திரும்ப கிடைக்கும்.