தி.மு.க., உட்கட்சி தேர்தல் விவகாரம் கட்சியினரிடம் நாளை விசாரணை | தர்மபுரி செய்திகள் | Dinamalar
தி.மு.க., உட்கட்சி தேர்தல் விவகாரம் கட்சியினரிடம் நாளை விசாரணை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 


தி.மு.க.,வின், 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ஏராளமானோர் தலைமைக்கு புகார் அனுப்பியதால் நாளை, (ஜூலை, 5) விசாரணை நடக்கவுள்ளதாக, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள்

கூறியதாவது:
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், 15 ஒன்றிய செயலாளர் பதவிக்கு, 64 பேர் விண்ணப்பித்தனர். அவர்களிடம் கடந்த மாதம், தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன் நேர்காணல் நடத்தினார். இதில், தலைமை உத்தரவுப்படி யாரும் ஒருமனதாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, ஒன்றிய செயலாளர்கள் தேர்வானதாக, தலைமையிடம் ஒரு பட்டியல் வழங்கப்பட்டது.
இதையறிந்த நிர்வாகிகள், நேரடியாக தலைமையில் புகாரளித்தனர். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் ராசா, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை, ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழுவினர், கடந்த, 28ல் விசாரிப்பதாக
அறிவிக்கப்பட்டது.
பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் குட்டி மரணத்தால் விசாரணை ஒத்தி வைத்த நிலையில், நாளை, (ஜூலை, 5) விசாரிக்க உள்ளனர். இதற்காக, மாவட்ட பொறுப்பாளர், தேர்தல் பொறுப்பாளர் மற்றும் புகார் அளித்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X