குளித்தலை நகர, தே.மு.தி.க., அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில், கரூர் புறநகர் மாவட்ட மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை, தொடர்ந்து செயல்படுத்திட வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது; கரூர் மாவட்ட அரசு வேளாண் கல்லுாரியை, இனுங்கூரில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் மீதமுள்ள, 150 ஏக்கரில் அமைத்து தர, முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தல்; தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நிறுவன தலைவர் பூரண குணமடைய, கடம்பவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.