கரூர் அருகே நடந்த, மாலை தாண்டும் விழாவில், 100க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றன.
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி ஜல்லி வாட நாயக்கனுார், ஆட்டு மந்தையில், ஸ்ரீ வீரஜக்கா தேவி அம்மாள் கோவிலில் கடந்த, 1ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. நேற்று மாலை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கரூர் வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள், 100க்கும் மேற்பட்ட காளை மாடு
களுடன் வந்தனர்.
பின், காளைகள் ஒரு கிலோ மீட்டர் துாரம் அழைத்து செல்லப்பட்டு, மாலை தாண்டு விழா நடத்தப்பட்டது.
அதில், பக்தர்கள் காளைகளை ஓட்டி வந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளுக்கு, பரிசாக எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது. பின், கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.