கரூரில் மாநகராட்சி பள்ளி அருகே, பைப் சேதமடைந்துள்ளதால், குடிநீர் சாலையில் ஆறாக
ஓடுகிறது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னரில், மாநகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனால், பள்ளிக்கு அருகே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் வசதிக்காக, குடிநீர் பைப் அமைக்கப்பட்டது. அதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன், பைப் சேதமடைந்தது. அதை, மாநகராட்சி ஊழியர்கள் மாற்றவில்லை.
இதனால், குடிநீர் சாலையில் ஆறாக ஓடிய வண்ணம் உள்ளது. மேலும், தேங்கி நிற்கும் குடிநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, உடைந்த பைப்பை உடனடியாக மாற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.