போலீஸ் டைரி - சேலம்
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அரசு பஸ் மோதி விவசாயி பலி
வாழப்பாடி: இடையப்பட்டியை சேர்ந்த விவசாயி சிவராஜ், 46. பேளூரில், சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை, 5:00 மணிக்கு, காய்கறி வாங்க, பேளூரிலிருந்து வாழப்பாடிக்கு, 'டிவிஎஸ்., - 50' மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அண்ணா நகர் அருகே சென்றபோது, வாழப்பாடியில் இருந்து கருமந்துறை நோக்கி, எதிரே வந்த அரசு பஸ், சிவராஜ் மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி சாவு

ஆத்துார்: தலைவாசல், சாத்தப்பாடியை சேர்ந்த, கூலித்தொழிலாளி முத்துக்குமார், 28. நேற்று, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில் காட்டுக்கோட்டையில் இருந்து சாத்தப்பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தார். மதியம், 2:00 மணிக்கு, சதாசிவபுரம், திருவள்ளுவர் நகர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, சாலையோர பனை மரம் மீது மொபட் மோதியது. அதில் முத்துக்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனீக்களால் இறந்த தொழிலாளி
இடைப்பாடி: பீகாரை சேர்ந்தவர் அயாஸ் உதின், 65. இவர், தேவூர், ஊராட்சிக்கோட்டையில், காவிரி குறுக்கே உள்ள கதவணையில், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று மதியம், 1:00 மணிக்கு, கதவணை ஷட்டரில், 'வெல்டிங்' பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த அயாஸ் உதினை, சக தொழிலாளிகள், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடிய பெண்களுக்கு 'காப்பு'
மேட்டூர்: குமாரபாளையம், சந்தைப்பேட்டையை சேர்ந்த முருகேசன் மனைவி தர்ஷினி, 23. இவர், குடும்பத்தினருடன் மாதேஸ்வரன் மாலைக்கு செல்ல, நேற்று, மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது, அவரது பையில் இருந்த மொபைல்போன், 8,000 ரூபாயை, இரு பெண்கள் திருடிக்கொண்டனர். இதுகுறித்து தர்ஷினி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரித்ததில், திருடியது, கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தை சேர்ந்த மாரியம்மாள், 36, மகாலட்சுமி, 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பணம், மொபைல் போனை மீட்டனர்.
வழிப்பறி: 4 பேர் கைது
சேலம்: அம்மாபேட்டை, அழகப்பன் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 28. நேற்று முன்தினம் காலை, 6:10 மணிக்கு, குமரகிரி சர்வீஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, 1,100 ரூபாய், மொபைல் போனை பறித்துக்கொண்டனர். ஜெகநாதன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து, தென்காசி, குற்றாலத்தை சேர்ந்த மாரியப்பன், 38, திருப்பத்துாரை சேர்ந்த வினோத்குமார், 30, ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், சேலம், வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த நவீன்குமார், மாமாங்கம், டால்மியா போர்டு அருகே சென்றபோது, கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர்கள், 3,000 ரூபாய், மொபைல் போனை பறித்தனர். அவர் புகார்படி, கருப்பூர் போலீசார், பெரம்பலுார், வேப்பந்தட்டையை சேர்ந்த செல்வகுமார், 47, ஆத்துார், முருகன் கோவில் தெரு பன்னீர்செல்வம், 26, ஆகியோரை கைது செய்தனர்.
விவசாயி பலி; லாரி டிரைவருக்கு வலை
தலைவாசல்: நாவக்குறிச்சியை சேர்ந்த, விவசாயி கலைமணி, 60. நேற்று, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்., ெஹவி டியூட்டி' மொபட்டில், நத்தக்கரை பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத லாரி, மொபட் மீது மோதியது. அதில் கலைமணி படுகாயமடைந்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தலைமறைவான டிரைவரை தேடுகின்றனர்.
புகையிலை விற்ற 40 கடைக்கு 'சீல்'
சேலம்: சேலம் மாநகரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து, புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளுக்கு, 'சீல்' வைத்து வருகின்றனர். கடந்த ஜூன், 29ல், 4, 30ல், 8, ஜூலை, 1ல், 15, 2ல், 10, 3ல், 3 என, இதுவரை, 40 கடைகளுக்கு, 'சீல்' வைத்துள்ளனர். மேலும், 30 கடைகளுக்கு, 'சீல்' வைக்க பட்டியல் தயாரித்துள்ளனர்.
விபத்தால் 'கால்' இழந்த தொழிலாளி
கெங்கவல்லி: 95.பேளூரை சேர்ந்தவர் மணிகண்டன், 30. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம், 'சைன்' பைக்கில், கெங்கவல்லியில் இருந்து கூடமலை வழியாக சென்றுகொண்டிருந்தார். ள்ளார். இரவு, 9:30 மணிக்கு நாவல்மரம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மணிகண்டனுக்கு, வலது கால் அகற்றப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கெங்கவல்லி போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X