தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த, குமார் மகள் சவுமியா, 20. தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன், 28. ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆய்வக உதவியாளராக உள்ளார்.
இவருக்கும், சவுமியாவுக்கும், கடந்த ஜூன், 9ல் திருமணமானது. நேற்று முன்தினம், சவுமியா, நீலகண்டன் ஆகியோர், வேப்பம்பூண்டி வந்தனர். அங்கிருந்து நேற்று ஊருக்கு புறப்பட்டனர். பைக்கில், திம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலைக்கு வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. அதில், புதுமண தம்பதியர் படுகாயமடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சவுமியா உயிரிழந்தார்.
நீலகண்டனை, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.