அங்கன்வாடி பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க கோரிக்கை | சேலம் செய்திகள் | Dinamalar
அங்கன்வாடி பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க கோரிக்கை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 



சேலம், அமானிகொண்டலாம்பட்டியில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் தனபாக்கியம் தலைமை வகித்தார். மாநில தலைவர் பத்மாம்மா, கவுரவ தலைவர் ஜெயம்மா சில்வா உள்பட பலர் பேசினர்.
அதில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பணி நிரந்தம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குதல்; பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்குதல்; ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, 10 லட்சம், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் பணிக்கொடை வழங்குதல்; கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் குழந்தைகள் நலன் கருதி, அங்கன்வாடி மையத்துக்கு கோடை விடுமுறை அளித்தல்; காய்கறி செலவின தொகை, பஸ் கட்டணத்தை உயர்த்தி வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மாவட்ட தலைவர் மணி, பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் வெள்ளையம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X