மூழ்கும் கப்பலாக அ.தி.மு.க., உள்ளது; அ.ம.மு.க., தினகரன் விமர்சனம்
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


''அ.தி.மு.க., திவாலாகி, மூழ்கும் கப்பலாக உள்ளது. தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, அ.ம.மு.க., பொது செயலர் தினகரன் தெரிவித்தார்.
சேலத்தில் நிருபர்களிடம் தினகரன் நேற்று கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமை பதவியை அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுக்குழு பெயரில் சதி, சூழ்ச்சி, அதிகாரம், பணபலம் பயன்படுத்தி வரக்கூடாது என்பதற்குதான் சட்ட விதி அப்படி உள்ளது. 98 சதவீத ஆதரவு உள்ளதெனில், பழனிசாமி எதற்காக பயப்பட வேண்டும்.

பன்னீர்செல்வத்துடன் காலையில் இருப்பவர், மாலையில் பழனிசாமி பக்கம் செல்கின்றார். இது பெட்டிகள் செய்யும் வேலை. ஒருவருக்கு, 25 லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர், கடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு துணிச்சலாக சென்று வந்தனர். ஆனால், அங்கிருந்தவர்கள் காசுக்கு வந்த கூலிப்படை கூட்டம். ஆடுகள் எல்லாம் ஓநாயாக, குள்ளநரியாக மாறி, பணம் தின்னும் பேய்களாக மாறிவிட்டனர். ஸ்டாலின் பொய் வாக்குறுதி தெரிவித்து, திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார். இதற்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சேலம் மாவட்ட அ.ம.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், நெய்க்காரப்பட்டியில் நடந்தது. அதில் தினகரன் பேசுகையில், ''அ.தி.மு.க., திவாலாகி, மூழ்கும் கப்பலாக உள்ளது. அக்கட்சி சின்னத்தில், தற்போது நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என்றார். செயலர்கள் செல்வம், மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X