நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கழிவு நீரால் நிரம்பும் புழல் ஏரி
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

செங்குன்றம்:நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனியார் ஆக்கிரமிப்புகளால், குடிநீர் ஆதாரமான புழல் ஏரி கழிவு நீரால் நிரம்பி, குப்பை கிடங்காக மாறி வருகிறது.


சென்னை-, திருவள்ளூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரி, 18.21 கி.மீ., சுற்றளவு உடையது.இந்த ஏரியை சுற்றி செங்குன்றம், புழல், சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், ஒரகடம், அம்பத்துார், திருமுல்லைவாயல், வெள்ளானுார், ஆரிக்கம்பேடு, காட்டூர், பொத்துார், பம்மதுகுளம், நல்லுார் என, 50க்கும் மேற்பட்ட நகர, கிராம பகுதிகள் உள்ளன.



மின் திருட்டு


சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரியில், 21.02 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்க முடியும்.ஆனால், கடந்த 10 ஆண்டாக சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், புதுார், ஒரகடம், அம்பத்துார், திருமுல்லைவாயல் உள்ளிட்ட, சென்னை மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஒட்டி, புழல் ஏரிக்குள், பல ஏக்கர் பரப்பளவிற்கு, தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.அவற்றில், குடியிருப்பு, சிறு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டடங்கள், நிரந்தரமாகி விட்டன.
அவற்றுக்கு வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் மின் வாரியத்தின் மூலம், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலம், 79வது வார்டு மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளை இணைக்கும், சரஸ்வதி நகரை ஒட்டி, புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மட்டும், 200க்கும் மேற்பட்ட, ஆக்கிரமிப்பு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட நீர்வளத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவற்றுக்கு, மாநில மின் வாரியத்தின் வாயிலாக, 200க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளுக்கான, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.சில இடங்களில், மின் கம்பங்களில், கொக்கி அடித்து மின் திருட்டும் நடக்கிறது. மேலும், சென்னை மாநகராட்சி மூலம், 500 தெரு விளக்கு கம்பங்களும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.அம்பத்துார் அடுத்த கொரட்டூர் ஏரியிலும், தனியார் ஆக்கிரமிப்பில் உருவான தக்சன் நகரிலும், மின் வாரியம் வாயிலாக இணைப்பும், மாநகராட்சி மின் வாரிய பிரிவு மூலம், தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.



தோல் நோய்கள்


அதே போன்று, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல், தென்றல் நகர், வெங்கடாச்சலம் நகரை ஒட்டியும், புழல் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் உருவாகி உள்ளன.புழல் ஏரி, கொரட்டூர் ஏரிகளில், அரசுத்துறை அதிகாரிகளின் ஆசியோடு உருவான ஆக்கிரமிப்பு வீடு உள்ளிட்ட கட்டடங்களுக்கான கழிவு நீர் கால்வாய், குப்பை அகற்றும் வசதி இல்லை என்பதால், அவை அனைத்தும், புழல் ஏரிக்குள் குவிக்கப்படுகின்றன.
அதனால், மேற்கண்ட பகுதியில், புழல் ஏரி நீர் அடர்த்தியான திடக்கழிவுநீராக மாறி விட்டது. அங்கு வசிப்போருக்கும், புழல் ஏரியில் இருந்து பெறப்படும் குடிநீரை பயன்படுத்துவோரும், சுகாதார சீர்கேடுக்கு ஆளாகின்றனர். சிறுவர்கள் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு ஆளாகின்றனர்.துர்நாற்றம் காரணமாக, இரவில், மூச்சுத்திணறல் அதிகரிப்பதாக, சுற்றுவட்டாரங்களில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில், அவ்வப்போது, ஏராளமான மீன்களும் செத்து மிதப்பது தொடர்கிறது.இந்த பிரச்னை குறித்து, சமூக ஆர்வலர்களின் புகார் காரணமாக, நீர்வளம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நாளுக்கு நாள் புதிய ஆக்கிரமிப்புகள், தடையின்றி உருவாகின்றன.
இனியும், அரசுத்துறை அதிகாரிகள், புழல் மற்றும் கொரட்டூர் ஏரிகளை மீட்பதில் அலட்சியம் காட்டினால், சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான மேற்கண்ட ஏரிகள், அனைத்து வகையான கழிவுகளால், சென்னையை நோய் தொற்று மண்டலமாக மாற்றிவிடும் ஆபத்து உள்ளது என, நீர்நிலை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
புழல் ஏரி, திருமுல்லைவாயல் அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், புழல் ஏரியில் குவியும் குப்பையை அகற்றும் துாய்மை பணியை, கடந்த மூன்று மாதமாக, வாரந்தோறும் செய்து வருகிறோம். ஆனால், அவர்களால் முழு அளவில் குப்பை, கழிவை அகற்ற முடியவில்லை. அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண முடியும்.
இல்லாவிட்டால் புழல் ஏரியின் நீர் ஆதாரம் விஷமாகிவிடும் ஆபத்து உருவாகி உள்ளது. இங்கு மேற்கொள்ளப்படும் துாய்மைப் பணி, நீர்நிலையை காக்க வேண்டும் என்ற, 'விழிப்புணர்வாக' மட்டுமே உள்ளது. இயற்கை வழங்கிய இந்த கொடையை மீட்க, அரசும், மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.

- நீர்நிலை ஆர்வலர்கள் ஆதங்கம், அம்பத்துார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X