கர்ப்பிணி தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
கர்ப்பிணி தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 


கூடுவாஞ்சேரி : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, வல்லாஞ்சேரி அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் மகேந்திரன் மகன் சஞ்சய், 21; தனியார் நிறுவன ஊழியர்.இவர், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, திருத்தேரி தீப்பாச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நர்சிங் மாணவி கோடீஸ்வரி, 21, என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் செய்தார்.

இருவரும், வல்லாஞ்சேரியில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினர்.இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த கோடீஸ்வரிக்கும், சஞ்சய்க்கும் இரு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரி, புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், கர்ப்பிணி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.கூடுவாஞ்சேரி போலீசார், கோடீஸ்வரி உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்கிறார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X