420 கிலோ புகையிலை பறிமுதல்
வாலிபர் தற்கொலை
கொடைக்கானல்: தெரசா நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மதன் 38. மனைவியை பிரிந்து இரு குழந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் தனது தாயிடம் குழந்தைகளை விட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
புது பெண் தற்கொலை
தாண்டிக்குடி: அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வெண்ணிலா 21. திருமணம் ஆகி இரு வாரங்கள் ஆன நிலையில் வெண்ணிலா அடிக்கடி அலைபேசியில் டிக் டாக் பார்ப்பது என பொழுதைப் போக்கி வந்துள்ளார் .இதை கணவர் மணிகண்டன் கண்டித்துள்ளார். மனமுடைந்த வெண்ணிலா விஷம் குடித்து இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கார் மோதி பெண் பலி
இடையகோட்டை: அரவக்குறிச்சி, குறிக்காரன் வலசை சேர்ந்த கோபிநாத் 29, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சீத்தமரம் நால்ரோடு- இடையகோட்டை ரோட்டில் காரை ஓட்டி சென்றார். புல்லா கவுண்டனுார் பிரிவு அருகே சென்ற போது எதிரே கொண்டைய கவுண்டனுாரை சேர்ந்த ஹரிஷ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதிய கார் , ரோட்டில் நடந்து சென்ற புல்லா கவுண்டனுாரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி வேலம்மாள் 55, மீதும் மோதியது. வேலம்மாள் பலியானார். ஹரிஷ் காயமடைந்தார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்றவர் கைது
பழநி: கவுண்டன்குளத்தை சேர்ந்த சண்முக வேல் 60. பஸ்ஸ்டாண்ட் பகுதியில் லாட்டரி விற்றார். டவுன் போலீசார் அவரை கைது செய்து லாட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்: அனுமந்தராயன்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரிட்டோ ஜியோ பிரி 30. 6 மாதங்களுக்கு முன் செலன்பிரபா 26, என்பவருடன் திருமணம் ஆனது. நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துபிரிட்டோ ஜியோ பிரி தற்கொலை செய்து கொண்டார். தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.