கடமலைக்குண்டு : ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு, மேலப்பட்டி, தாழையூத்து, பூசாரி குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சிறுதானிய சாகுபடி முறை குறித்து சீட்ஸ் தொண்டு நிறுவனம் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன இயக்குனர் பால்துரை தலைமை வகித்தார். சென்டெக்ட் இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சபரிநாதன்,பழமை வாய்ந்த முக்கிய சிறு தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி, ராகி ஆகியவற்றை பயிர் செய்யும் முறை குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் விளக்கினார். சிறுதானியங்கள் சாகுபடியில் செலவு குறைவு, நீர் தேவை குறைவு என்றும் மக்கள் செயற்கை உரம், பூச்சி மருந்து இல்லாத இயற்கையான உணவு மூலம் ஆரோக்கியமான வாழ்வு பெற முடியும் என்றும் விளக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.