12 'போக்சோ' வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை | கடலூர் செய்திகள் | Dinamalar
12 'போக்சோ' வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 


கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 12 'போக்சோ' வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தரப்பட்டது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், கடந்த 6 மாதங்களில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3,பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4, பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் 1 வழக்கு என மொத்தம் 12 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தரப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X