அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்த...முடிவு; கல்வராயன்மலை கிராம மக்கள் ஆவேசம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்த...முடிவு; கல்வராயன்மலை கிராம மக்கள் ஆவேசம்
Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News


கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை கிராமங்களில் முறையான தார் சாலை இல்லாததால், நோயாளிகள், கர்ப்பிணிகளை துாளி கட்டி துாக்கிச் செல்லும் அவலம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் கொடுத்த வாக்குறுதியை மறந்ததால் நாங்கள் தினம், தினம் அவதியடைந்து வருகிறோம். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வராயன்மலை தெற்கு கிராமங்களான குண்டியாநத்தம், கருவேலம்பாடி, சின்ன கருவேலம் மேட்டுக்காடு ஆகிய கிராம மக்களுக்கு எவ்வித அரசு உதவிகளும் கிடைப்பதில்லை.

கிராமங்களுக்கு அடிப்படை வசதியான தார்சாலை கூட இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை.மிகவும் மோசமான மண் சாலை மட்டுமே உள்ளது. அதுவும் வனத்துறையினர் வசம் உள்ளதால் அந்த சாலையில் செல்வதற்கு கூட தடை விதித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்திலும், வயது முதிர்ந்தவர்கள், சிறு பிள்ளைகள் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் துாளி கட்டி துாக்கி செல்லும் நிலை இருந்து வருகிறது.மருத்துவமனைக்குச் செல்வதற்குள் உயிரிழிப்பு ஏற்படுகிறது. சரியான முறையில் மருத்துவ உதவிகளைப் பெற முடியாமலும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும் பரிதவிக்கின்றனர்.

இக்கிராங்களைச் சேர்ந்த மக்கள் பஸ் செல்லும் சாலையை அடைய 8 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், இதனால் அப்பகுதி மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்க வைக்கும் நிலை உள்ளது. மேலும், விவசாய விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு அதிக விலை கொடுத்து எடுத்துச் செல்லும் அவலம் நீடிக்கிறது. இதனை எந்த ஆட்சி வந்தாலும் ஒருவரும் கண்டு கொள்ளவதில்லை.இதனால், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள், ஆர்.டி.ஓ., எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தார்ச்சாலை போட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதனை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு, வெற்றி பெற்றதும், மக்கள் பிரதிநிதிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை.

இதுவரையில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர்களால் ஏமாற்றப்பட்டு வரும் இப்பகுதி கிராம மக்கள், இனியும் தாமதிக்காமல் தங்கள் பகுதிகளுக்கு தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம். இந்திய குடியுரிமை ஆதாரங்களான ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை போன்றவற்றை 3 கிராம மக்களும் கலெக்டரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X