தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு உதவி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு உதவி
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி, கிராம சாவடி தெருவைச் சேர்ந்தவர் வரதன் மனைவி அஞ்சலை. இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று முன்தினம் இரவு எரிந்து சேதமானது. நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நேரில் சென்று நிவாரண நிதியாக 5,000 ரூபாய் மற்றும் ஒரு சிப்பம் அரிசி, காய்கறி தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.
நகரமன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், தி.மு.க., நகர துணைச் செயலாளர்கள் அபுபக்கர், சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள் கேசவன், சதீஷ், நகர மன்ற முன்னாள் துணைச் சேர்மன் கலைச்செல்வன், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் அன்சர், அப்துல் கலீல், வார்டு செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X