ஏழு கோயில்களில் பாலாலயம்: இன்றும், நாளையும் நடக்கிறது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஏழு கோயில்களில் பாலாலயம்: இன்றும், நாளையும் நடக்கிறது
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 

பழநி : பழநி முருகன் கோயில் உபகோயில்களான ஏழு கோயில்களில் இன்றும் , நாளையும்(ஜூலை 6-) விமான பாலாலயம் நடைபெற உள்ளது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான பழநி நகரில் உள்ள வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில் ஆகிய ஏழு கோயில்களுக்கு விமான பாலாலய நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. மாலை 5:00 மணிக்கு முதல் கால வேள்வி , நாளை அதிகாலை 4:00 மணிக்குபாலாலயம் நடக்கிறது.இதில் அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், முதற்கால வேள்வி, திருவமுது வழங்குதல், இரண்டாம் கால வேள்வி, பசு வழிபாடு, நவகொள் வழிபாடு, ஸ்தபதி மரியாதை, திருப்பணி துவக்கம் ஆகியவை நடைபெறும் என, இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X