மும்முரமாக நடந்து வரும் குழாய் சீரமைப்பு பணி: தினமலர் செய்தி எதிரொலி | தேனி செய்திகள் | Dinamalar
மும்முரமாக நடந்து வரும் குழாய் சீரமைப்பு பணி: தினமலர் செய்தி எதிரொலி
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 

கூடலுார் : தினமலர் செய்தி எதிரொலியால் கூடலூரில் குடிநீர் மெயின் குழாய் சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.



கூடலுாரில் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கூலிக்காரன் பாலம் ஓடை அகலப்படுத்துவதற்காக சேதமடைந்திருந்த குடிநீர் மெயின் குழாய் சீரமைக்கும் பணி ஜூன் 28 ல் துவங்கியது. ஒரு வாரம் இப்பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதுவரை கூடலூரில் குடிநீர் சப்ளை இருக்காது என கூறப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் துவங்குவதில் மெத்தனம் காட்டப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெயின் குழாய் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பணி முடிந்து குடிநீர் சப்ளை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X