குறைகளை கூறுவோம் தீர்வு காண்போம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
குறைகளை கூறுவோம் தீர்வு காண்போம்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 

வாகன ஒட்டிகள் சிரமம்

அய்யனார் கோயில் இருந்து பெருமாள்கோவில்பட்டி வரை செல்லும் ரோட்டை 5க்கு மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஆ.மூக்கன், மலைப்பட்டி.

புதிய ரோடு அமைக்கப்படும்

புதிய தார் ரோடு அமைக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கான அனுமதி ,நிதி வந்தவுடன் ரோடு அமைக்கப்படும்.ராசு, ஊராட்சி துணைத் தலைவர், பெருமாள்கோவில்பட்டி.கிணறு மூடாததால் ஆபத்தான நிலைவிராலிமாயன்பட்டி ஒன்றிய பள்ளி எதிரே உள்ள கிணறு மூடப்படாததால் ஆபத்தான நிலையில் உள்ளது. கிணற்றை மூடி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.இரும்புத்துரை, விராலிமாயன்பட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்
கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர்.சேதம் அடைந்த ரோடுஒடன்சத்திரத்தில் நகராட்சி திருவள்ளுவர் ரோட்டிலிருந்து காந்தி காய்கறி மார்க்கெட் செல்லும் இணைப்பு ரோடு சேதம் அடைந்துள்ளது.கர்ணன், ஒட்டன்சத்திரம்.

சீரமை

க்கப்

படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி திருவள்ளுவர் ரோட்டில் இருந்து மார்க்கெட் செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திருமலைச்சாமி ஒட்டன்சத்திரம், நகராட்சி தலைவர்.தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அய்யலுார் அருகே கஸ்பா அய்யலுாரில் மூன்று ரோடு பிரியும் இடத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் விபத்து அபாயம் உள்ளது.தங்கவேல், அய்யலுார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.கருப்பன், பேரூராட்சி தலைவர்

தேங்கும் கழிவுநீர்
சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சாக்கடை கால்வாயில் மண் மேவி உள்ளது. அசுத்த நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.முத்துவேல், சித்தையன்கோட்டை.

அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
கழிவுகளை முழுமையாக அகற்ற ஏற்பாடு செய்யப்படும்.சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர்.வாரச் சந்தையில் கூடுதல் வசூல்வேடசந்துார் ஞாயிறு வாரச்சந்தையில் கடைகளுக்கு ரூ.100 முதல் ரூ. 150 வரை வசூல் செய்வதாக வியாபாரிகள் குமுறுகின்றனர். முறையான வசூல் செய்து வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும். இல்லை எனில் காய்கறிகள் கூடுதல் விலை வைத்து விற்க நேரிடும்.கந்தசாமி, வேடசந்துார்.

விலை பலகை அமைக்கப்படும்
அலுவலகத்திற்கு புகார்கள் வருகின்றன. இனி வரும் வாரங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என பலகை வைக்கப்படும். அதன் படி வியாபாரிகள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.முகமது உசேன் , பேரூராட்சி செயல் அலுவலர்.கோழி பண்ணையால் தொந்தரவுதிண்டுக்கல் வீரப்பன் நகரில் தனியார் கோழி வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு கோழி கழிவுகளால் சுவாச பிரச்னை போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பாம்பு போன்ற விஷ பூச்சிகள் குடியிருப்புக்குள் வருவதால் நடமாடவே அச்சமாக உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு கோழி பண்ணையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஜயலட்சுமி, வீரப்பன் நகர்.

நடவடி

க்

கை எடுக்கப்படும்
சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் சரி செய்யப்படும் .சிவசுப்பிரமணியம்,மாநகராட்சி கமிஷ்னர்,

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X