ரோடு பள்ளத்தால் பதறும் வாகன ஓட்டிகள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ரோடு பள்ளத்தால் பதறும் வாகன ஓட்டிகள்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 

கொடைக்கானல் நகரின் முக்கியத்துவம் பெற்ற ரோடாக அப்சர்வேட்டரி ரோடு உள்ளது. தாழ்வான ரோடாக உள்ள இங்கு சிறு மழை பெய்தால் கூட நீரூற்று ஏற்படுகிறது. இவை வடிந்து ஓட வடிகால் இல்லாமல் ரோட்டில் செல்வதால் விரைவில் ரோடு சேதம் அடைகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமைத்த ரோடு தற்போது குண்டும், குழியுமாக வாகனங்களை பதம் பார்க்கிறது. நெடுஞ்சாலை துறையின் கண்துடைப்பு பணியால் ரோடும் விரைவில் சேதம் அடைகிறது. ரோட்டை சீரமைப்பது அவசியமாகிறது.

...............விரைந்து நடவடிக்கை கொடைக்கானல் - அப்சர்வேட்டரி ரோடு சேதம் அடைந்து உள்ளதை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேவர் பிளாக் மீது அமைக்கப்பட்ட தார் சாலையை நீக்கி புதிய தார் ரோடு அமைக்கவும், வாய்க்கால்களை சீரமைத்து மழை நீர் , ஊற்று நீர் விரைந்து வடிந்து ஓடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பரதன், நெடுஞ்சாலை உதவி பொறியாளர், கொடைக்கானல்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X