விக்ரம் படத்துக்கு வானதி வாழ்த்து | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
விக்ரம் படத்துக்கு வானதி வாழ்த்து
Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
Latest district News



கோவை : கமலஹாசனின் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.வித்தியாசமாக வாழ்த்து சொல்லியுள்ளார்,



கமலஹாசனின் விக்ரம் திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், விக்ரம் படத்தை நேற்று பார்த்துவிட்டு, தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

'சட்டசபைத் தேர்தலில் உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்களது கலைப்பணியால் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் கமல்ஹாசன்' என, கிண்டல் கலந்து பாராட்டியுள்ளார்.
கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், கமல்ஹாசனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X