சரஸ்வதி மகால் நூலகத்தில் திருட்டு? ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



தஞ்சாவூர் : சரஸ்வதி மகால் நுாலகத்தில், பழமையான நுால்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த தமிழ், தெலுங்கு ஏட்டுச்சுவடிகள், நாயக்கர் காலத்தில் சேகரிக்கப்பட்டு, 'சரஸ்வதி பண்டாரகம்' என்ற நுாலகம் உருவாக்கப்பட்டது.பிறகு மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நுால்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு, சரஸ்வதி மகால் நுாலகமாக மாறியது. இந்த நுாலகத்தில், 30 ஆயிரத்து, 433 ஓலைச்சுவடிகளும், 6,426 புத்தகங்களும் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, நுாலகத்தை பராமரித்து வருகிறது.

சி.இ.ஓ., பொறுப்பில் உள்ளவர்களை, நுாலகத்திற்கு நிர்வாக அலுவலராக நியமிப்பதால், அவர்கள் முறையாக பணியாற்ற முடியாத சூழலில், சரஸ்வதி மகால் நுாலகம் சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சீகன் பால்க் என்பவர் பைபிளின் 'புதிய அத்தியாயத்தை' தமிழில் 1715ம் ஆண்டு மொழி பெயர்த்தார். அது, சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டதால், பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அது திருடப்பட்டதாக கூறப்படுகிறது.அது போன்ற பழமையான அரிய பல நுால்கள் மாயமாகி இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, மக்கள் நல பேரவை செயலர் ஜீவக்குமார் கூறியதாவது:
ஆங்கிலேயேர் காலத்தில், பர்னல் என்பவரால், 'ஆக்கம் பெற்ற நுால் பட்டியல்' என்ற ஆவணம் தயாரிக்கப்பட்டு, நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.அதை ஒப்பிட்டு பார்த்தால், பைபிள் போல வேறு எந்த நுால்களும் திருடப்பட்டுள்ளதா என்ற விவரத்தை எளிதில் அறியலாம்
.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X