ஊட்டி : நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கையால், 456 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
கலெக்டர் அம்ரித் கூறுகையில், ''மாவட்டத்தில் பேரிடர் அபாய பகுதிகளை, அந்தந்த வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அபாயகரமான மரங்கள் குறித்து கணக்கெடுத்து அகற்றும் பணி நடக்கிறது. மழை எச்சரிக்கையால், 456 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்டால், வருவாய் துறையினரை தொடர்பு கொண்டு நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.