நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை | நீலகிரி செய்திகள் | Dinamalar
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
Latest district News



ஊட்டி : நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கையால், 456 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.



நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரு நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, அவலாஞ்சி, 94, அப்பர்பவானி, 54 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்று காலை, ஊட்டி- கூடலுார் சாலை பைக்காரா பகுதியில் இரு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.ஊட்டி தீயணைப்பு நிலையஅலுவலர் பிரேமானந்தா தலைமையில் ஊழியர்கள் மரத்தை அகற்றினர்.

கலெக்டர் அம்ரித் கூறுகையில், ''மாவட்டத்தில் பேரிடர் அபாய பகுதிகளை, அந்தந்த வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அபாயகரமான மரங்கள் குறித்து கணக்கெடுத்து அகற்றும் பணி நடக்கிறது. மழை எச்சரிக்கையால், 456 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்டால், வருவாய் துறையினரை தொடர்பு கொண்டு நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X