இலங்கை தமிழர்களுக்கு நிதி ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர் | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
இலங்கை தமிழர்களுக்கு நிதி ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 



திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 25 நாட்களில் யாசகம் எடுத்து சேமித்த, 10 ஆயிரம் ரூபாயை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக, யாசகர் பாண்டி வழங்கினார்.



துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி, 65. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ள இவர், கொரோனா கால காட்டத்தில் திண்டுக்கல், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர்களிடம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.மேலும் இவர், 2,000 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். கடந்த, 25 நாட்களாக கிரிவலப்பாதையில் யாசகம் எடுத்து சேமித்த, 10 ஆயிரம் ரூபாயை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக, மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X