தேவேந்திர குல வேளாளர் பட்டியல் விவகாரம் பிரதமரிடம் பேசுவதாக பா.ஜ., எம்.பி., உறுதி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் விவகாரம் பிரதமரிடம் பேசுவதாக பா.ஜ., எம்.பி., உறுதி
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
Latest district News



கோவை : தேவந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கையான, பட்டியலில் இருந்து வெளியேறுதல் தொடர்பாக, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, எம்.பி., சுனிதா துக்கல் தெரிவித்தார்.



கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி உற்சவ நாற்று நடவு விழாவில், ஹரியானா மாநிலம் சிர்ரா தொகுதி பா.ஜ., எம்.பி., சுனிதா துக்கல் கலந்து கொண்டார்.அப்போது, தேவேந்திர குல வேளாளரை, பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கோரி அவரிடம் மனு அளிக்கப்பட்டது.எம்.பி., சுனிதா துக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பான மசோதா மீது பேசும்படி, பிரதமர் என்னைக் கேட்டுக்கொண்டார்.அம்பேத்கர், குறிப்பிட்ட சில சாதிகளை, பொருளாதார, சமூக பின்தங்கிய நிலையை மனதில் கொண்டு ஒரு பட்டியலாக சேர்த்தார்.
பொருளாதார, சமூக ரீதியாக முன்னேறியவர்கள் விரும்பினால், அப்பட்டியலில் இருந்து வெளியேறலாம்.தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா, மள்ளர் எழுச்சிப் பேரவை தலைவர் மனுநீதி சோழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X