திருப்பூர் : பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான லோடு 'கிராவல்' மண் கடத்தப்படுவதாக, விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தாராபுரம் சுற்றுப்பகுதியில் நிலத்தை வாங்கிய பலர், விவசாயம் செய்யாமல், மண் குவாரி நடத்த அனுமதி வாங்கியுள்ளனர். ஒரு 'பர்மிட்' வாங்கி விட்டு, நாள் முழுவதும் கட்டுப்பாடின்றி, நுாற்றுக்கணக்கான லோடுகள் மண் எடுக்கின்றனர்.தாராபுரம், சூரியநல்லுார், இடையங்கிணறு, கொழுமங்குளி, ராசிபாளையம், கள்ளிப்பாளையம், காங்கயம் தாலுகா படியூர், நிழலி கிராமங்களில், ஒரு 'பர்மிட்' வாயிலாக 'டிப்பர்' லாரிகளில் கணக்கில்லாமல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் கடத்தி செல்கின்றனர்.
கனிமவள அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை. கலெக்டர் நேரடியாக வாகன தணிக்கை செய்து, கள ஆய்வு நடத்த வேண்டும். மண் எடுக்க வழங்கிய பர்மிட்டை ரத்து செய்து, வேளாண் நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.