எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டம்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
Latest district News



திருப்பூர் : திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் (தி.மு.க.,) மகாலட்சுமி நகர் வழிபாட்டு தல பிரச்னையில், ஹிந்து முன்னணி துாண்டுதல் பேரில் வழக்கு தொடரப்பட்டதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.இது, ஹிந்து முன்னணி, பா.ஜ., யுவசேனா, ஹிந்து மக்கள் கட்சி உட்பட ஹிந்து அமைப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.



இதை கண்டித்து, நேற்று காலை அவரது வீட்டை முற்றுகையிடுவதாக, ஹிந்து முன்னணி அறிவித்தது. போலீசார் பேச்சு நடத்தினர்.இதனால், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.திடீரென, பெருமாநல்லுார் ஹிந்து முன்னணி பொறுப்பாளர் ஜீவகணேஷ், தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தொண்டர்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X