திருமண நிதியுதவிக்காக 10,736 பேர் காத்திருப்பு: சமூக நல துறையில் பல திட்டங்கள் முடங்கும் அபாயம்
Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காஞ்சிபுரம்: சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பெற, 10 ஆயிரத்து 736 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு நிதி ஒதுக்காததால், இரு ஆண்டுகளாக திருமண தொகை உட்பட பல நிதி உதவி கிடைக்கவில்லை என, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விண்ணப்பதாரர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.latest tamil newsதமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு, பலவித நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன. விதவை மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்.

ஏழை விதவை மகளின் திருமணம் நடத்துவதற்கு, மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்; பெற்றோரை இழந்த பெண் திருமணத்திற்கு, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது.ஆதரவற்ற பெண்கள்தீண்டாமையை ஒழிப்பதற்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்; ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளது.குறிப்பாக, இரு பெண் குழந்தைகளுக்கு, முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; திருநங்கை நலன் திட்டம்; குடும்ப வன்முறையில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம்; பெற்றோர் மற்றும் மூத்த குடி மக்கள் நலன் பராமரிப்பு திட்டம் என, 12 விதமான திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த 66 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2011 - 2022ம் ஆண்டு வரை விண்ணப்பித்துள்ளோரில் பெரும்பாலானோருக்கு, திட்ட நிதிஉதவி கிடைக்கவில்லை.குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால், 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.அதேபோல், பட்டதாரி பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதயுதவியும், எட்டு கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.


குற்றச்சாட்டுஅதன்படி கலப்பு திருமணம் மற்றும் பிற திருமண நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்து 736 பேருக்கு, இரு ஆண்டுகள் ஆகியும், அரசு நிதியுதவி கிடைக்கவில்லை என, விண்ணப்பதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு நிதி ஒதுக்காததால், சமூக நலத்துறையின் பல திட்டங்கள் முடங்கிபோகும் நிலை உள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத கலப்பு திருமணம் செய்த நபர் ஒருவர் கூறியதாவது:கலப்பு திருமண நிதியுதவி பெற ஆன்லைனில் விண்ணப்பித்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரசீது கொடுக்கும்போது, லஞ்சம் கேட்கின்றனர். அதை கொடுத்தால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு கோப்புகள் செல்கின்றன. இல்லையென்றால் ஓரங்கட்டி விடுகின்றனர்.நிதியுதவி கோரி நான் விண்ணப்பித்து இரு ஆண்டுகள் ஆகியும், அரசு நிதிஉதவி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிதியுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத சமூக நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:
ஆண், பெண் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தோருக்கு, கலப்பு திருமண நிதிஉதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு, 2019ம் ஆண்டு வரை பணம் வழங்கப்பட்டு உள்ளது.அதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல், நடப்பு மாதம் வரையில் விண்ணப்பித்தவர்களுக்கு, நிதியுதவி அளிக்கவில்லை.அரசிடமிருந்து நிதி கிடைத்ததும், விண்ணப்பதாரர்களுக்குரிய நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.கையூட்டை அறவே தவிர்ப்போம்!அரசு நிதியுதவி பெறுவதற்கு, தகுதி வாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருப்போர் கணிசமான 'கட்டிங்' தொகை கேட்கின்றனர். குறிப்பாக, அரசு நிதி பெறுவதில் 10 சதவீதம் கேட்கின்றனர். காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சமீபத்தில் ஒரு பெண் அலுவலர், பயனாளியிடம் பணம் பெறும் போது, கையும் களவுமாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை: நிதியாண்டு நிதியுதவிக்கு விண்ணப்பம்2019 - -20 4,6002020- - 21 4,3702021 - -22 1,766மொத்தம் 10,736.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
05-ஜூலை-202216:36:36 IST Report Abuse
S.kausalya இரண்டு.வருடங்களாக. சரி தான், திருமண உதவி திட்டத்தில் இருந்து தற்போது கர்ப கால, மற்றும் குழந்தை பிறந்த பின் அளிக்கப்படும் உதவிகளையும் சேர்த்து கொடுப்பார்கள் போல. இப்படியே 5 வருடம் போய் விடும் . பிறகு ஆட்சிக்கு இவர்களே வந்தால் அடித்த 5வருடத்தையும் கொடுப்போம் , கொடுப்போம் என சொல்லியே காலம் கடத்துவார்கள். அடுத்தவர் ஆட்சிக்கு வந்தால், கொடுக்கவில்லை என புகார் சொல்வோம். அது தான் திராவிட model
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
05-ஜூலை-202212:09:07 IST Report Abuse
ANANDAKANNAN K அனைவருக்கும் வணக்கம், இனி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மாநிலத்தில் செயல்படுத்த முடியாது போல தான் தெரிகிறது, எதனால் கடந்த மும்பது வருடமாக மாநிலத்தை ஆட்சி செய்த அரசுகள் அரசுக்கு வரி வருவாய் மற்றும் பிற வருமானம் வருமாறு ஒன்றும் செய்யவில்லை அதற்க்கு மாறாக செலவுகள் பலமடங்கு அதிகரிக்க செய்துள்ளார்கள், அரசு ஊழியர்களுக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கும் சம்பளம் பென்ஷன் கொடுக்கவும் மட்டுமே வருமானம் வருகிறது, மீதம் மக்கள் நலத்திட்டம், பராமரிப்பு செலவுகள் மற்றும் புதிய திட்டம் செயல் படுத்த அரசிடம் காசு இல்லை, புதிய வருமானம் எப்போ வருமோ அப்பத்தான் மக்கள்நல திட்டம் செயல்படுத்த முடியும் அதுவரை ஒன்றும் மக்களுக்கு கிடைக்காது, வருமானம் வந்து இருந்தால் ஏன் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் கடன் வாங்குகின்றன சிந்தனை செய்யுங்கள் மக்களே அதும் அஞ்சு லட்சம் கோடி, சீமான் அவர்கள் நடையில் சொன்னால் என் அப்ப தாவுக்கு பணத்தை புடுச்சு என்ன கூட தெரியாது, இதுல எப்படி அப்பு இந்த அஞ்சு லட்ச கோடி னு என்னனு அதுக்கு தெரியும் எல்லாம் தலைவிதி .
Rate this:
Cancel
05-ஜூலை-202211:48:06 IST Report Abuse
Venkatramanan R எனது மனைவி திருமணத்திற்கு முன்பு தாலிக்கு தங்கம் அரசு உதவி பெற 2019 ஆகஸ்டு மாதம் பதிவு செய்தார். இன்னும் வரவில்லை, திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டனர்!
Rate this:
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202212:19:33 IST Report Abuse
செல்வம்அண்ணா நீங்க ஓட்டு யாருக்கு போட்டீர்கள்? இவனுவ வந்து அந்த திட்டம் நிறுத்தி விட்டதாகவும் செய்தி வந்ததே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X