மாவட்டத்தில் 139 ஆசிரியர் காலி பணியிடம் விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் இயங்கும், ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2022--23ம் கல்வியாண்டில் ஜூன், 1 நிலவரப்படி காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி என ஐந்து கல்வி மாவட்டங்களிலும், பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்--20, ஆங்கிலம்--1, கணிதம்--4, அறிவியல்--14, சமூக அறிவியல்--8 என, 47 காலி பணியிடம் உள்ளது. முதுகலை ஆசிரியர் தமிழ்--12, ஆங்கிலம்--7, கணிதம்--10, வேதியியல்--11, வணிகவியல்--18, பொருளாதாரம்--25, வரலாறு--7, கணினி அறிவியல்--2 என, 92 காலி பணியிடங்கள் உள்ளதாக, முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க, நேற்று காலை முதலே, ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். விண்ணப்பத்தை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர். இதேபோல் பெருந்துறை, பவானி, கோபி, சத்தி கல்வி மாவட்ட அலுவலகத்திலும் பட்டதாரிகள் குவிந்தனர். விண்ணப்பம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X