ஈரோடு அருகே, தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், மற்றொரு தனியார் கல்லுாரி விரிவுரையாளர் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மூலைப்பள்ளிபட்டி, தேவிகுளம் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிவண்ணன், 33; ஈரோடு தனியார் பொறியியல் கல்லுாரி விரிவுரையாளர். கல்லுாரிக்கு யமஹா க்ரக்ஸ் பைக்கில் நேற்று காலை பெருந்துறை நோக்கி சென்றார். அப்போது பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி, பள்ளியூத்து தனியார் கலை அறிவியல் கல்லுாரி பஸ் வந்தது. அறச்சலுார், தலவுமலையை சேர்ந்த டிரைவர் துரைராஜ் ஓட்டி வந்தார். வண்ணாங்காட்டு வலசு பிரிவுக்குள் செல்ல, பஸ்சை வலப்புறமாக டிரைவர் திடீரென திருப்பினார்.
அப்போது பைக் மீது பஸ் மோதியதில், மணிவண்ணன் நிலை குலைந்து தடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு, ஈரோடு தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, டிரைவர் துரைராஜை கைது செய்தனர். கல்லுாரி பஸ்சை மீட்டு, தாலுகா போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.