சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் சூடுபிடிப்பு சிறையில் வளர்ப்பு; தந்தை, வாலிபரிடம் அடுத்தடுத்து விசாரணை
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிக்கிய போலி ஆதார் அட்டை தயாரித்த வாலிபரிடமும், வளர்ப்பு தந்தையிடமும், தமிழக
மருத்துவ பணிகள் குழுவினர், அடுத்தடுத்து விசாரணை நடத்தினர்.
ஈரோட்டில்,16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை, பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து பெயர், வயது மாற்றம் செய்து கருமுட்டை விற்பனைக்கு உறுதுணையாக இருந்த ஈரோடு பாரதிபுரத்தை சேர்ந்த ஜான், 25, ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர். வளர்ப்பு தந்தை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் உள்ளார். போலி ஆதார் அட்டை
தயாரித்து கொடுத்த ஜான், ஈரோடு கிளை சிறையில் உள்ளார். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மருத்துவ பணி இயக்குனரக அலுவலர்கள், ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
ஜூலை, 4ம் தேதி ஒரு நாள் மட்டும் நால்வரையும் தனித்தனியே சிறை வளாகத்தில் உள்ள அறையில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் ஈரோடு கிளை சிறைக்கு
வந்தனர்.
அங்கு தனி அறையில் சிறை மேற்பார்வையாளர் முன்னிலையில் விசாரணை நடந்தது. காலை, 10:00 மணிக்கு விசாரணையை முடித்து கொண்டு மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் அங்கிருந்து கோபிக்கு சென்றனர். அங்கு மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம், 30 நிமிடம் விசாரணை
நடத்தினர்.
விசாரணையில் மிக முக்கியமாக, கருமுட்டை விற்பனைக்காக சம்பந்தப்பட்டசிறுமி மட்டுமின்றி, இதேபோல் வேறு சிறுமிகளிடம் கருமுட்டை பெறப்பட்டதா, எத்தனை பேரின் ஆதார் அட்டையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆதார் அட்டை பெற்று எத்தனை முறை கருமுட்டை பெறப்பட்டது. ஆதார் அட்டை பெறாமல் எத்தனை முறை கருமுட்டை பெறப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் யார் என்பது குறித்து இருவரிடமும், கேள்வி கேட்டு பதில் பெறப்பட்டுளளது.
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் அடுத்தடுத்த விசாரணையால் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X