சேலத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் யார்? அடையாளம் காண முடியாமல் பழனிசாமி விசுவாசிகள் திணறல்
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சேலத்தில் பழனிசாமிக்கு எதிராக பன்னீர் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காண முடியாமல், பழனிசாமி விசுவாசிகள் திணறி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்த நிலையில், பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், பழனிசாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஒட்டுதல், கூட்டம் நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

ஆனால், பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், பழனிசாமிக்கு எதிராக நிர்வாகிகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பதுங்கி பாயும் வித்தையை கையில் எடுத்துள்ளனர். பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், அதை இரவோடு இரவாக கிழித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்த சில நாட்களில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டினர்.
தொடர்ந்து பழனிசாமி ஆதரவாளர்கள் சூரசம்ஹாரம் என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டிய நிலையில், அதற்கு போட்டியாக, தொண்டன் ரவி என்னும் பெயரில்,'அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் அனுமதி இன்றி அணுவும் அசையாது' என, பதிலடி கொடுத்து போஸ்டர் ஒட்டினர்.
போஸ்டர் யுத்தம் நடந்து வரும் நிலையில், சேலத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு தலைமை ஏற்பது யார்? யாரின் உத்தரவின் படி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன என்பது குறித்து, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட நிர்வாகிகளிடம் பழனிசாமி அறிக்கை கேட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் அணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது தெரியாமல், உள்ளூர் நிர்வாகிகள் திணறி வருகின்றனர். அதே நேரத்தில், ஜூலை,13ம் தேதிக்கு பின் சேலத்தில் சுற்றுப் பயணம் செய்ய பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரப்பி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகளை செய்வது யார் என்பது தெரியாமல், பழனிசாமி விசுவாசிகள் திணறி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X