மழை நீர் வடிகால் பணியில் பாதுகாப்பு குறைபாடு?கட்டுமான வல்லுனர்கள் புகார்! | சென்னை செய்திகள் | Dinamalar
மழை நீர் வடிகால் பணியில் பாதுகாப்பு குறைபாடு?கட்டுமான வல்லுனர்கள் புகார்!
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 

சென்னை:சென்னையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் கட்டுமான பணியில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என கட்டுமான வல்லுனர்கள் புகார் தெரிவித்தனர்.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மழை நீர் வடிகால் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதால், முதல்வர் நேரடியாக இத்திட்ட பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான கட்டுமான பணிகளில் ஒப்பந்ததாரர்கள் கவன குறைவாக செயல்படுவதும், இதனால் விபத்துக்கள் நடப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், மழை நீர் கால்வாய் கட்டுமான பணிக்கும் சம்பந்தம் இல்லை என மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:மழை நீர் கால்வாய் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில், மரங்கள், கால்வாய், கட்டடம், சுற்றுச் சுவர் ஆகியவை வரும் இடங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.இதன்படி, இது போன்ற இடங்களில் எவ்வளவு ஆழம் கால்வாய் தோண்டப்படுகிறதோ அதைவிட ௨ அடி அதிக ஆழத்துக்கு இரும்பு பலகைகளால், 'ஷோரிங் ஷட்டரிங்' தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். இதில், 'ஷீட் பைலிங்' முறையில் பலகை தடுப்புகள் அமைப்பது அவசியம்.
சென்னையில் நில மட்டம், நீர் செல்லும் வாட்டம் அறிந்து தான் மழை நீர் கால்வாய் ஆழம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறுகின்றனர்.இந்த விஷயத்தில் நடக்கும் விதிமீறல்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




இணைப்பில் கவனம் தேவை

சென்னையில் பல்வேறு இடங்களில் ௩ அடி அகலம், ௫ அடி ஆழத்துக்கு மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. எந்தெந்த தெருக்களில் எவ்வளவு ஆழம், அகலத்துக்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களும் வெளிப்படையாக உள்ளன.ஆனால், இக்கால்வாய்கள் ஒன்றுக்கொன்று முறையாக இணைக்கப்படுகிறதா என்பதில் உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை அடிப்படையில் நீளம், அகலம், ஆழத்துக்கு ஏற்ப ஒப்பந்ததாரர்கள் கால்வாய் பணிகளை மேற்கொள்கின்றனர்.ஒரு தெருவில் உள்ள கால்வாய் எங்கிருந்து துவங்குகிறது, எங்கு இணைக்கப்படுகிறது என்பதில் கவனம் செலுத்தினால் இதன் பயன் முழுமையாக கிடைக்கும் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X