3 புதிய பேருந்து நிறுத்தங்கள்ஆலந்துாரில் திறந்து வைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
3 புதிய பேருந்து நிறுத்தங்கள்ஆலந்துாரில் திறந்து வைப்பு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 

ஆலந்தூர்:ஆலந்துார் மண்டலத்தில் 62.59 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மூன்று புதிய பேருந்து நிறுத்தங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன்,

நான்கு உயர் கோபுர மின் விளக்குகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 62.59 லட்சம் ரூபாய் செலவில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில், மூன்று பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நான்கு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், பேருந்து நிறுத்தங்களை துவக்கி வைத்து, மின் விளக்குகளை இயக்கி வைத்தார். விழாவிற்கு, முன்னாள் எம்.பி., ஆர். எஸ்.பாரதி தலைமை தாங்கினார். மண்டல குழு தலைவர் சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X