முதல்வர் ஆய்வு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



காரைக்காலில் காலரா பாதிப்பு குறித்து...

குடிநீர் குழாய்களை மாற்ற ரூ.50 கோடி ஒதுக்கீடுரூ.80 கோடியில் பொது சுகாதார மருத்துவமனை காரைக்காலில் கடந்த மாதம் வெவ்வேறு பகுதிகளில் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால், அது மேலும் பல இடங்களில் பரவி, தற்போது காலராவாக மாறியுள்ளது.

நேற்று முன்தினம் வரை 2,443 பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 766 பேர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றனர். அதில் 17 பேருக்கு காலரா நோய் ஏற்பட்டுள்ளது.அதனையொட்டி கடந்த 3ம் தேதி அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா மற்றும் கலெக்டர் முகமது மன்சூர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

முதல்வர் ஆய்வு
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று முதல் முறையாக காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை, நண்டலாறு அருகே அமைச்சர் சந்திர பிரியங்கா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.பின்னர் முதல்வர், அதிகாரிகளிடம் காலரா நோயின் தாக்கம், தற்போதைய நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து, திருநள்ளார் சாலையில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த முதல்வர், குடிநீரில் போதுமான அளவிற்கு குளோரின் கலந்து வினியோகிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அளிக்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், பி.ஆர்.சிவா, சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன், எஸ்.பி., சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வயிற்றுப்போக்கு மற்றும் காலரா பரவும் விதம், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களை கலெக்டர் முகமது மன்சூர் படக்காட்சி மூலம் விளக்கினார்.பின்னர் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கினர்.தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்ததும், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.உடன், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள நீர் தேக்கத் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்து, தேவையான அளவு குளோரின் தண்ணீரில் கலந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.அதனால், தற்போது காலரா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 25 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரூ.80 கோடியில் புதிய மருத்துவமனை
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பழைய குடிநீர் குழாய்களை ஒட்டு மொத்தமாக மாற்றி, புதிய குழாய்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.மேலும், காரைக்காலுக்கு புதிதாக பொது சுகாதார மருத்துவமனை ரூ. 80 கோடி மதிப்பில் கட்டுவதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.

சிமென்ட் கால்வாய்
கழிவுநீர் மண் தரையில் ஓடுவதால், குடிநீர் குழாயில் கலக்க வாய்ப்பு உள்ளது. அதனால், கழிவு நீர் வாய்க்கால் அனைத்தும் சிமென்ட் கால்வாய்களாக மாற்றப்படும். இதுபோன்ற நேரங்களில் மக்கள், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு:காரைக்கால் நகரப் பகுதியில் புதிதாக புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. உடனே இணைப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அகலங்கண்ணு பகுதியில் பழைய குடிநீர் குழாய்களை மாற்ற ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளது.

கவனக்குறைவு கூடாது
மாவட்டத்தில், இரண்டு மாதங்களாகவே வயிற்றுப் போக்கு அறிகுறி இருந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுபோன்ற கவனக்குறைவு இருக்கக் கூடாது என்றும், துவக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்கவும், குடிநீரை அடிக்கடி பரிசோதனை செய்யவும், குடிநீரில் குளோரின் கலந்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

அடிக்கடி வருவேன்
முதல்வராக பதவியேற்று ஓராண்டிற்கு பிறகு தற்போதுதான் காரைக்காலுக்கு வருவதாக கூறப்படுகிறது. வரக்கூடாது என்பது நோக்கமல்ல. காரைக்கால் மாவட்ட மக்கள் என் மீது அன்பு கொண்டவர்கள்.கடந்த 1990ம் ஆண்டு நான் வேளாண் அமைச்சராக இருந்த போது அடிக்கடி இங்கு வந்துள்ளேன். விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளேன். முதல்வரான பிறகும் அடிக்கடி வந்து சென்றேன்.கடந்தாண்டு, கொரோனா தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், வரமுடியவில்லை. வேறு காரணமல்ல. மக்களின் அவசர நிலையை அறிந்து தற்போது வந்துள்ளேன். இனி அடிக்கடி வருவேன்.மாவட்டத்திற்குத் தேவையான அளவிற்கு டாக்டர்கள் நியமித்துள்ளேன். அவர்கள் இங்கேயே தங்கி பணி புரிய அறிவுறுத்தி உள்ளேன்.

1000 பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு
கடந்த ஆட்சியில், அரசு துறையில் எந்த பணியிடமும் நிரப்பவில்லை. ஏறக்குறைய 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக போலீஸ் துறையில் காலி பணியிடங்களை நிரப்பி உள்ளோம். மேலும், 1000 பணியிடங்கள் நிரப்ப உள்ளோம்.தற்போது, வருவாய் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின் துறையில் எல்.டி.சி., - யூ.டி.சி., மற்றும் அசிஸ்டென்ட் என 600 பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளோம்.பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் நிரப்ப உள்ளோம். மருத்துவத் துறையில் டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். மேலும், நியமிக்க உள்ளோம்.காரைக்கால் முழு வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு முதல்வர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X