ஆவண மோசடி வழக்கு: மின் ஊழியருக்கு சிறை | சென்னை செய்திகள் | Dinamalar
ஆவண மோசடி வழக்கு: மின் ஊழியருக்கு சிறை
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 

பூந்தமல்லி:ஆவண மோசடி வழக்கில் ஈடுபட்ட, மின்வாரிய ஊழியருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, 58. பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.நுகர்வோரிடம் இருந்து, மின் பயன்பாட்டின் தொகைக்கான காசோலை, 66 ஆயிரத்து, 200 ரூபாயை வசூலித்தார். அந்த பணத்தை முறைகேடு செய்தது தொடர்பாக, மத்திய குற்ற பிரிவு போலீசாரால், ஆவண மோசடி பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று தீர்ப்பு வழங்கினார். பிரபுவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X