மணப்பாக்கம்- - முகலிவாக்கம் பிரதான சாலை படுமோசம் | சென்னை செய்திகள் | Dinamalar
மணப்பாக்கம்- - முகலிவாக்கம் பிரதான சாலை படுமோசம்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
Latest district News

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் மணப்பாக்கம், முகலிவாக்கம் அமைந்துள்ளன.

மவுன்ட் - -பூந்தமல்லி சாலையில் இருந்து பிரிந்து செல்லும் இந்த பிரதான சாலை மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் வழியாக, போரூர்- - குன்றத்துார் சாலையை அடைகிறது.இச்சாலையில், மாநகர, மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி ஆயிரக்கணக்கான கனரக, நான்கு, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்திற்காக மணப்பாக்கத்தில் இருந்து முகலிவாக்கம் வரை பிரதான சாலை பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது.பெரும்பாலான பணிகள் முடித்து சில மாதங்கள் ஆன நிலையில், சாலையை புனரமைக்க சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் விட்டு, தயார் நிலையில் உள்ளது.

ஆனால், குடிநீர் வாரியம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதனால், சாலை அமைக்கப் படாமல் உள்ளது.இதில், மணப்பாக்கம், அம்பேத்கர் நகர் பிரதான சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவ்வப்போது பெய்து வரும் மழைக்கு, அச்சாலை முழுதும் சகதியாகி போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்துகிறது.
தொடர் மழை துவக்குவதற்கு முன் சாலை சீரமைக்காவிட்டால், இச்சாலையை வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைவில் சாலை அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

- -நமது நிருபர்- -


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X