நந்தம்பாக்கம் - -மணப்பாக்கம் பாலம் அழகுபடுத்தும் பணி தீவிரம் | சென்னை செய்திகள் | Dinamalar
நந்தம்பாக்கம் - -மணப்பாக்கம் பாலம் அழகுபடுத்தும் பணி தீவிரம்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
Latest district News

நந்தம்பாக்கம்,:நன்கொடையாளர்கள் உதவியுடன், நந்தம்பாக்கம் - -மணப்பாக்கம் பாலத்தை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்காரச் சென்னை - 2.0 திட்டத்தின் கீழ் சென்னை, கிண்டி, கத்திப்பாரா முதல் மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலை வரையிலான பகுதிகளை அழகுபடுத்துவது, பூங்கா அமைப்பது, வண்ண ஓவியங்கள் வரைவது மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.அதற்கு இணையாக, ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைகள், பாலங்கள் நன்கொடையாளர்கள் வாயிலாக அழகுபடுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், நந்தம்பாக்கம்- - மணப்பாக்கம் இடையிலான பாலம் அழகுபடுத்தும் பணி துவங்கிஉள்ளது. பாலத்தின் நடைபாதை பகுதிகளில், வண்ண பூந்தொட்டிகள் வைத்து, செடிகள் வளர்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.இதே போல், ஆலந்துார் மண்டலத்தில் உள்ள மற்ற பாலங்களும் விரைவில் அழகுபடுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X