கொலை வழக்கு ஆயுள் தண்டனை உறுதி | மதுரை செய்திகள் | Dinamalar
கொலை வழக்கு ஆயுள் தண்டனை உறுதி
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 


மதுரை : மதுரை நாகமலை புதுக்கோட்டை முத்து. ஆடுகள் வளர்க்க குடில் அமைத்திருந்தார். அருகே நாகராஜன் என்பவர் மது அருந்தினார். அதை கண்டித்த முத்துவை 2013 ல் மரக்கட்டையால் தாக்கி நாகராஜன் கொலை செய்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். நாகராஜனுக்கு மதுரை நீதிமன்றம் 2019 ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு: சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X