அரசு பள்ளியில் விவசாய பிரிவு நீக்கம்; அதிருப்தியில் மாணவர்கள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
அரசு பள்ளியில் விவசாய பிரிவு நீக்கம்; அதிருப்தியில் மாணவர்கள்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 


பண்ணைக்காடு : பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாய பாடப்பிரிவு நீக்கப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். துவக்க முதலே கணிதம், அறிவியல், கலை, விவசாய பாடப்பிரிவுகள் தொடர்ந்த நிலையில், விவசாய பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதால் ஆசிரியர்கள் நியமனம் இன்றி ஏனைய ஆசிரியர்கள் கூடுதலாக கவனிக்கும் நிலை இருந்தது.

நடப்பாண்டில் ஆசிரியர்கள் இல்லாததை காரணம் காட்டி இப்பாடப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. இது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் பாடப்பிரிவு துவக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தலைமையாசிரியர்விஜயவேல் : விவசாய பாட பிரிவிற்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லாததை அடுத்து இப்பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்ற பின் இப்பிரிவு மீண்டும் நடைமுறைக்கு வரும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X