கால்நடை போலி டாக்டர் கைது | மதுரை செய்திகள் | Dinamalar
கால்நடை போலி டாக்டர் கைது
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 


பேரையூர் : பேரையூர் அருகே சந்தையூர் பாலுகருப்பையா 37. இவர் அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் புகையிலை விற்பதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் காந்தி எஸ்.ஐ லக்ஷ்மணன் தலைமையிலான போலீசார் பாலுகருப்பையா கடையில் சோதனை செய்தபோது புகையிலை மற்றும் குட்கா இருந்தது.

கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் அதிக அளவில் கடைக்குள் இருந்தது. இவரை கைது செய்து 4 கிலோ 750 கிராம் புகையிலை ,குட்கா மற்றும் கால்நடை மருந்துகள் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில் ''இவர் அந்தப் பகுதிகளில் இருக்கும் கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்து வந்துள்ளார். அரசு அனுமதியும் இன்றி பெட்டி பெட்டியாக மருந்துகள் இருந்தது என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X