போலீஸ் செய்திகள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 



மனைவியை கொன்ற கணவன் கைது

ஒட்டன்சத்திரம்: ஆனைமலை வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்தவர் கார்த்திகேயன் 36. இவரது மனைவி காயத்ரி 25. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதுாரில் வேறொரு நபருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். அந்த நபர் விட்டு விட்டு சென்ற நிலையில் தான் ஒட்டன்சத்திரத்தில் இருப்பதாக கணவருக்கு காயத்ரி தகவல் கொடுத்தார். மனைவி திருந்தி விட்டார் என்ற நம்பிக்கையில் கார்த்திகேயன் மனைவியுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற காயத்ரி, சாலைப்புதுார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் மனைவியின் தலையை பிடித்து பாலத்தின் சுவரில் மோதினார். இதில் அவர் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.ஒருவருக்கு குண்டாஸ்பழநி: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தனபாண்டி 23. இவரை நகை பறிப்பு வழக்கில் சில மாதங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் எஸ்.பி., பாஸ்கரன் பரிந்துரையில் கலெக்டர் உத்தரவின் படி குண்டாசில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இருவர் கைதுநெய்க்காரபட்டி: நரிக்குறவர் காலனியில் கடைக்கு சென்ற நரிக்குறவர் பெண்ணிடம் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தகராறு ஏற்பட்டது. நரிக்குறவர்கள் 6 பேர் காயம் அடைந்த நிலையில்,. பழநி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த முத்து 37, சூர்யா 23, ஆகியோரை கைது செய்தனர்.

ரூ. 70 லட்சம் இழப்பீடுதிண்டுக்கல்: எஸ்.பி., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சுந்தரபாண்டியன், டூவீலரில் சென்ற போது விபத்தில் இறந்தார். தனியார் வங்கி மூலம் கிடைத்த ரூ. 70 லட்சம் இழப்பீடு காசோலையை அவரின் குடுபத்தாரிடம் எஸ்.பி., பாஸ்கரன் வழங்கினார். கடையில் திருடியவர் கைதுதிண்டுக்கல்:பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்டாலின் காட்டேஜ் பகுதி ரவுண்ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மிச்சர் கடையில், சில தினங்களுக்கு முன் கூரையை உடைத்து பணம்திருடு போனது. வடக்கு போலீசார் விசாரித்து வந்த நிலையில், மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்த சேகரை 30, கைது செய்தனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X