ரோடு மேல் ரோடால் பள்ளமான வீடுகள்; ஊராட்சி நிர்வாகம் குளறுபடியால் மக்கள் தவிப்பு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி காந்திஜி நகர் பகுதியில் ரோடு மேல் ரோடு அமைத்ததால் வீடுகள் பள்ளத்தில் போக ,மழை வந்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அவலம், குப்பை வாங்க வருவோர் முறையாக வராத நிலையில் இதன் பணியார்கள் பணம் கேட்டு நச்சரிப்பதால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ரோடு போடப்பட்டது, பழைய ரோட்டின் மீது புதிய ரோடை போட்டுள்ளனர். இதனால் வீடுகள் பள்ளத்தில் போக மழை நீர் விடுகளுக்கு புகும் நிலை தொடர்கிறது.

ரோடையாவது தரமாக அமைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. புதியதாக அமைத்த இந்த ரோடு பாதி மேடாகவும், பாதி பள்ளமாகவும் சீரற்ற நிலையில் உள்ளது. குறுகலான இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. கரடு முரடாக மாறிய இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதி வேகத்தில் வருவதால் குடியிருப்பு வாசிகள் தினமும் பாதிப்பினை சந்திக்கின்றனர். எதிரே வாகனங்கள் வந்தால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும் இவ்வழியை பயன்படுத்துகின்றனர்.ரோட்டோரம் பள்ளமாக உள்ளதால் மாணவர்கள் சற்று ஒதுங்கினாலும் விபத்தில் சிக்குகின்றனர்.சந்து தெருக்களிலிருந்து வரும் டூவீலர்கள் ஓட்டிகள் மலை மீது ஏறுவது போல் ரோட்டில் ஏறி செல்லும் நிலை உள்ளது.இவர்களும் சற்று கவன குறைவாக சென்றால் விபத்தினை சந்திக்கும் நிலைதான் ஏற்படுகிறது.

இது முக்கிய பகுதியாக இருந்தும் ஊராட்சி நிர்வாகம் கடமைக்கு தரமற்ற ரோடு அமைத்துள்ளதால் ஆங்காங்கே சேதமடைந்து மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக இவ்வழியாக செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்க சரி செய்து தருவதாக கூறியதோடு சரி. இது வரை சரி செய்யாமல் தட்டிகழித்து வருகின்றனர். இதோடு குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் முறையாக வருவதில்லை. வந்தாலும் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர்.பணம் கொடுக்காவிட்டால் அந்த வீட்டில் குப்பை வாங்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். சாக்கடைகளை கடமைக்கு துார் வாரி அதன் கழிவுகளை அப்படியே போட்டு செல்கின்றனர். நாளடைவில் இது சாக்கடையிலே தேங்குகிறது. இதன் மூலம் இங்கு நோய் தொற்றுக்கும் வழி ஏற்படுகிறது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X