பராமரிப்பின்றி கிடக்கும் மின் தகன யூனிட்; வளாகத்தில் உட்கார கூட ஒரு இடமில்லை | மதுரை செய்திகள் | Dinamalar
பராமரிப்பின்றி கிடக்கும் மின் தகன யூனிட்; வளாகத்தில் உட்கார கூட ஒரு இடமில்லை
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 


மதுரை : மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள தத்தனேரி மயானத்தில்அடிப்படை வசதிகளின்றி மக்கள், ஊழியர்கள் தத்தளிக்கிறார்கள். இம்மயானத்தில் உடல்களை விறகில் எரியூட்ட பெரியளவில் இடம் உள்ளது. ஏற்கனவே ஒரு மின்சார தகன யூனிட் உடன் கொரோனா காலத்தில் கூடுதலாக ஒரு யூனிட் அமைக்கப்பட்டது.

அதில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்கள் 24 மணி நேரமும் தகனம் செய்யப்பட்டன. இரண்டு யூனிட்டுகளையும் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளன. சில மாதங்களாக இரண்டு யூனிட்டுகளும் முறையாக பராமரிக்கப்படாததால்உடல்களை தகனம் செய்யும் ஊழியர்கள் படாதபாடுபடுகிறார்கள். மயான வளாகத்தில் உட்கார கூட இடம் இல்லாததால் அங்கு வருவோர் நிற்க வேண்டியுள்ளது. ஏற்கனவே துன்பத்தில் வரும் மக்கள் நிற்பதால் சிரமத்திற்குஉள்ளாகிறார்கள். மயானத்தை கடந்து குடியிருப்புகளும் உள்ளன.

அதை கருத்தில் கொண்டு சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தினமும்மருந்து தெளித்து நோய் தொற்று ஏற்படாமல் கவனிக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மின் தகன மேடையில் எரியூட்ட ஒரு உடலுக்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஆனால், உரிய வசதிகள் செய்து தருவதில்லை. நாங்கள் பல முறை மாநகராட்சிக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மயானத்தை நவீன முறையில் பராமரிக்க, மாற்ற வேண்டும் என்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X