ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.
தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.மாவட்டத்தில், ஊட்டி- பைக்காரா சாலை உட்பட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலை; தீயணைப்பு ஊழியர்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
பந்தலுார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால், தோட்ட தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் கடும் மேக மூட்டம் நிலவி வருவதால், டிரைவர்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்களை இயக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.