பருவமழை தீவிரம்: கடும் குளிரான காலநிலை | நீலகிரி செய்திகள் | Dinamalar
பருவமழை தீவிரம்: கடும் குளிரான காலநிலை
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
Latest district News



ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.



ஊட்டி, கூடலுார், குன்னுார், கோத்தகிரி, பந்தலுார் மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்தது.இதனால், உள்ளூர்மக்களுடன், சுற்றுலாபயணிகளும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். குறைந்தபட்சம், 9; அதிகபட்சம், 14 டிகிரி செல்சியசாக, வெப்பநிலை பதிவாகி உள்ளது.

தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.மாவட்டத்தில், ஊட்டி- பைக்காரா சாலை உட்பட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலை; தீயணைப்பு ஊழியர்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
பந்தலுார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால், தோட்ட தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் கடும் மேக மூட்டம் நிலவி வருவதால், டிரைவர்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்களை இயக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X