1 கிலோ பிளாஸ்டிக் கழிவு ரூ.10க்கு கொள்முதல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
1 கிலோ பிளாஸ்டிக் கழிவு ரூ.10க்கு கொள்முதல்
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 



ஈரோடு : ஈரோடு மாவட்ட கிராமங்களில், பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவு, 17 ஆயிரம் கிலோ இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் மதுபாலன் கூறியதாவது:
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கிராமங்களை உருவாக்க, 225 பஞ்.,களிலும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, உள்ளாட்சி துாய்மை காவலர்களிடம் வழங்கலாம். 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 10 ரூபாய் கொடுப்பர்.இத்திட்டத்தில் இதுவரை, ஊரக பகுதியில், 17 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பை பெறப்பட்டுள்ளது.இவற்றை நவீன இயந்திரங்கள் மூலம் அரைத்து, மறுசுழற்சி மூலம் தரமான சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் அரசுக்கும் நிதிச்சுமை குறையும்; கிராமங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு படிப்படியாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X